ஏடிஎம்மில் கைவரிசை காட்டிய கொள்ளையன்! 1 மணி நேரத்தில் கைது செய்து கெத்து காட்டிய சென்னை போலீஸ்!

ஏடிஎம்மில் கொள்ளையடித்த நபரை ஒரு மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை பல்லாவரத்திற்கு அருகிலுள்ள பம்மல் பகுதியில் செயல்பட்டு வரும் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம்-க்கு நேற்று நள்ளிரவு மர்ம நபர் வந்துள்ளார். அவள் என்னை உடைத்து பணத்தை திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார். திருடிக்கொண்டிருந்த போது அலார்ம் அடித்ததால் பயந்துபோன அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவமானது வங்கியின் சுற்றுவட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை மாநகரில் இயங்கிவரும் ஐசிஐசிஐ தலைமையகத்திலிருந்து சிசிடிவி கேமரா பதிவுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டன. உடனடியாக அமல் பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்த நிர்வாகிகள் சிசிடிவி கேமரா பதிவுகளை ஒப்படைத்தனர்.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக குறிப்பிட்ட ஏடிஎம்-க்கு சென்றனர். அப்போது அருகேயிருந்த ஒரு கட்டிடத்தில் வசித்து வரும் நபரிடம் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்டவர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த அருள்மணி என்பதை கண்டறிந்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர் அருள்மணியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, மது அருந்துவதற்காக பணம் இல்லாததால் ஏ.டி.எமை உடைக்க முயன்றதாக கூறியுள்ளார்.

காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பம்மல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.