ஏன்டா மண்டையை இதுக்கெல்லாமா பயன்படுத்துவாங்க? ஏர்போர்ட்டில் சிக்கிய நவ்சாத்! அதிர்ந்த அதிகாரிகள்!

தலைக்கணியும் விக்கிற்குள் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இளைஞர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் மாமல்லபுரம் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு நவ்சாத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் வேலை நிமித்தமாக இவர் ஷார்ஜாவுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று ஷார்ஜாவிலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் இன்று விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடையே கடுமையான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வித்தியாசமான சிகை அலங்கரிக்கப்பட்டு நவ்சாத் வந்து கொண்டிருந்தார்.

அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவரை முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது அவர் தலையில் இருந்த விக்கை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். அவருடைய தலையின் நடுப்பகுதியில் தங்கம் திருடுவதற்கு ஏதுவாக மொட்டை அடிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த விக்கிற்குள் 1 கிலோ தங்கம் இருந்துள்ளது. இதனை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவமானது நடிகர் சூர்யா "அயன்" திரைப்படத்தில் திருடியதற்கு ஒப்பாக அமைந்திருந்தது.இந்த திருட்டு முயற்சியாகும் இன்று கொச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.