தூக்கத்தில் இருந்த மனைவியை போட்டுத் தள்ள வந்த கணவன்..! ஆனால் அங்கு அவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்..! வைரல் வீடியோ உள்ளே!

கணவர் உறங்கிக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியை தலையணையை வைத்து கொலை செய்யத் துணியும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பொதுவாகவே கணவன்-மனைவிக்கு இடையில் சண்டைகள் ஏற்படுவது சகஜம்தான். சில சமயங்களில் அந்த பிரிவு அவர்களுக்குள் புரிதலை ஏற்படுத்தி அழகிய நெருக்கத்தையும் உண்டாக்கும். ஆனால் சண்டையிடும் போது துணைவியை வெறுப்பேற்றும் விதமாக தொடர்ந்து ஏதேனும் கூறினால் அது மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

அந்த வகையில் தற்போது கணவன் ஒருவர் தன்னுடைய மனைவியை கொலை செய்ய பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில் கணவனும் மனைவியும் முதலில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். பின்னர் அந்த மனைவி கட்டிலில் உறங்க செல்கிறாள் . உடனே அவரது கணவர் அந்த பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்கிறார். 

 எதார்த்தமாக அந்த பெண் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த திசையில் இருந்து மறு திசைக்கு திரும்பி படிக்கிறார். அப்போது தன்னுடைய மனைவியின் முகத்தில் தலை வைத்து அழுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது கால் பகுதியில் கணவர் தலையணையை வைத்து கொலை செய்ய பார்க்கிறார்.

இதனை அறிந்த அந்த மனைவி உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து தன் கணவரை பார்க்கிறாள். இந்த வீடியோ பதிவானது டிக்டாக் செயலிக்காக செய்யப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.