மச்சினிச்சியிடம் தவறாக நடந்துகொண்ட ஆண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் மனைவியின் தங்கையை உறவுக்கு கட்டாயப்படுத்திய அக்காள் கணவர்! பதற வைத்த கொளத்தூர் சம்பவம்!

வடசென்னையில் கொளத்தூர் என்னுமிடம் அமைந்துள்ளது. சரவணன் என்ற 44 வயது நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திவ்யா. சரவணன் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். திவ்யாவின் இளைய சகோதரிக்கு வயது 19.
சில நாட்களுக்கு முன்னர் சரவணன் தன்னுடைய இளைய மச்சினிச்சிக்கு செல்போனில் கால் செய்துள்ளார். "தனியாக பேச வேண்டும் வா" என்று சரவணன் அவரை அழைத்துள்ளார். தன்னுடைய அக்காவின் கணவர் என்ற மரியாதையில் அந்த பெண் திருமுல்லைவாயிலிலிருந்து கொளத்தூருக்கு ரயில் மூலம் சென்றுள்ளார்.
கொளத்தூரிலிருந்து இருவரும் கடற்கரைக்கு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது சரவணன் அந்த பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். மேகம் சரவணன் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என்பதை உணர்ந்த அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
உடனடியாக தன்னுடைய வீட்டிற்கு சென்று நிகழ்ந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் சரவணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.