வயிற்றில் குழந்தையை கொடுத்த கணவனை தூக்கில் ஏற்ற போராடும் கர்ப்பிணி மனைவி! பதற வைக்கும் காரணம்!

கர்ப்பிணி பெண்ணொருவர் கணவனை தூக்கிலிட காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவமானது சீனா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீன நாட்டை சேர்ந்தவர் வாங் னேன். இவருடைய வயது 32. யூ சியாடாங் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வாங் நேன் கர்ப்பமானார். யூ சியாடாங் தன் மனைவியை மகிழ்விக்க பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்கு சென்று விடுமுறையை கொண்டாடினர்.

தாய்லாந்தில் உள்ள 111 அடி உயரமான மலையிலிருந்து தன் மனைவியை யூ சியாடாங் கீழே தள்ளியுள்ளார். வாங் நேன் கீழே விழுந்ததை கண்ட அருகில் இருந்தோர் மிகவும் அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்ற சென்றனர். ஆனால் அவரின் கணவர் மலை உச்சியில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். 

அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். அப்போது அவருடைய கணவர் கீழே இறங்கி வந்தார். வாங் நேன் கணவரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று சீன மொழியில் கேட்டுள்ளதை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளர் கூறியது, மற்றும் மனைவி கீழே விழுந்த போது மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஆகியன போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் அவர்கள் யூ சியாடாங்கை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.  போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவரை காவல்துறையினர் விடுவித்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இவ்வளவு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வாங் நேன் காவல்துறையினரிடம் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

அதாவது 'எனது கணவர் சூதாட்டத்தில் தோற்று பல கோடிக்கணக்கில் கடனாளியாக உள்ளார். அவர் என்னிடம் கடனை அடைப்பதற்காக 2.5 மில்லியன் டாலர் பணத்தை கேட்டார். ஆனால் நான் 1.25 மில்லியன் டாலர் பணத்தை மட்டும் தருவேன் என்று கூறிவிட்டேன். இதனால் என்னை கொலை செய்து என் முழு சொத்தையும் அபகரிக்க அவர் திட்டமிட்டார். என் கணவருக்கு உயரம் என்றால் பயம்.

ஆனால் சமீப காலங்களில் என்னை மிகவும் உயரமான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அது எனக்கு நிறைய சந்தேகங்களை உருவாக்கியது. என்னையும் என் வயிற்றில் உள்ள குழந்தையும் அவர் கொள்ள முயன்றதால் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முறையிடுகிறேன்" என்று கூறினார். இந்த சம்பவமானது தாய்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.