குழந்தை விழித்து இருக்கிறது..! 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி! பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்!

தேனி மாவட்டத்தில் இரண்டாவது கணவர் படுக்கைக்கு அழைத்த போது வர மறுத்ததால் அந்தப் பெண்ணையும் அவருடைய மூன்றரை வயது குழந்தையையும் தாக்கி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் கம்பம் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த பெண் கம்பத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் இல்லத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்தப் பெண் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு அருகில் அவரது தோழியின் வீடு அமைந்துள்ளது. 

தோழியின் தம்பி சிங்கராஜா என்பவருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஆரம்பித்துள்ளது. நாளடைவில் இவர்களுக்கிடையே இருந்து வந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. இதனையடுத்து சிங்கராஜா அந்த பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். இதனையடுத்து இருவரும் கடந்த மாதம் திருமணமும் செய்து கொண்டிருக்கின்றனர். பின்னர் இருவரும் காமயகவுண்டன்பட்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென இந்த பெண்ணின் வீட்டில் இருந்து அழுகுரலும் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த பெண்ணின் வீட்டை நோக்கி வந்துள்ளனர்.

ஆனால் பெண்ணின் வீடு வெளியே பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்து அழுகுரல் கேட்ட படியே இருந்ததால் அங்கிருந்தவர்கள் கூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஒரு வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணையும் மூன்றரை வயது பெண் குழந்தையும் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். 

அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று இரவு அந்த பெண்ணை சிங்கராஜா உல்லாசமாக இருப்பதற்கு அழைத்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் சிங்கராஜா கடும் கோபத்திற்கு ஆளாகி அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி இருக்கிறார் . இதனையடுத்து அங்கு அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மூன்றரை வயது பச்சை இளம் பெண் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருந்திருக்கிறார். பின்னர் குழந்தையும் அவரது தாயையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் சிங்கராஜா. இதனைத் தொடர்ந்து பூட்டி அந்த வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவை அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசாரின் தீவிர தேர்தலுக்குப் பின்பு இந்த ராஜாவை கைது செய்தனர் மேலும் அவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.