அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த விபச்சாரம்..! கல்பாக்கத்தை அதிர வைத்த சம்பவம்!

காதலியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கல்பாக்கம் பகுதியில் புதுப்பட்டினம் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த பெண் ஒருவர் சென்ற மாதம் 21-ஆம் தேதி முதல் காணவில்லை என்று பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். ஆர்.எம்.ஐ நகர் பகுதியை சேர்ந்த  நான் ஓட்டுநரான கணேஷ் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. உடனடியாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

கணேஷும் அந்த சிறுமியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசைக்காட்டி கணேஷ் அந்த சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கிருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

ஆல் இந்தியா டிராவல் ஏஜென்சி உரிமையாளரான சுகாசினி என்பவர் கணேஷின் தாயாராவார். இவர் தன்னுடைய டிராவல் ஏஜென்சி மூலம் தமிழ்நாட்டு பெண்களை குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் பாலியல் ஏஜென்ட்களுக்கு விற்று வந்துள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு சிறுமியை மீட்டு எடுத்தனர். பின்னர் கணேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கணேஷின் தாயாரான சுஹாசினியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கல்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.