கல்யாணமான பெண்ணை கட்டிப்பிடித்து காதல் சொன்ன இளைஞன்! அப்புறம் நடந்த மிரட்டல், விரட்டல்

பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவமானது கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டத்தில்  தவுட்டுப்பாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே மோதுகாடு எனும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவியின் பெயர் சரண்யா. இவரது வயது 26. பரமத்திவேலூர் என்னும் பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். 

பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். மோகன்ராஜனின் வயது 34‌. இவருக்கு சரண்யா மீது ஆசை இருந்தது. இந்நிலையில் சரண்யா சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சமயம் பார்த்த மோகன்ராஜ் அவரை கட்டி பிடித்து காதலிப்பதாக கூறியுள்ளார். 

பயந்துபோன சரண்யா கத்த தொடங்கினார். அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் அவரை விட்டு விட்டார். நிகழ்ந்தவற்றை யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவதாக சரண்யா மோகன்ராஜ் மிரட்டியுள்ளார். 

மிரண்டுபோன சரண்யா தனக்கு நேர்ந்த அவற்றை தன் பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவமானது தவுட்டுபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.