இளைஞருடன் ஓடிய மனைவி! பிறகு மாயமான தாய்! கோவை இளைஞருக்கு நேர்ந்த துயரம்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

தாலி கட்டிய மனைவி வேறொரு வாலிபருடன் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்து போன கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகேயுள்ள டி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.  இவருடைய வயது 39. இவர் அப்பகுதியில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகள் முன்னர் அதே பகுதியை சேர்ந்த லலிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் லலிதா மணிகண்டனை பிரிந்து சென்றார். மணிகண்டன் தன்னுடைய தாயாரான திலகா உடன் இணைந்து வசித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்கள் முன்னர் திலகாவும் காணாமல் போனார்.

சொந்த மனைவி மற்றும் தாய் தன்னை விட்டு பிரிந்து சென்றதை மணிகண்டனால் தாங்கி கொள்ள இயலவில்லை. மணிகண்டன் தினமும் மது அருந்த தொடங்கினார். வழக்கம்போல நேற்று மது கடைக்கு சென்ற அவர் போதை தலைக்கேறும் வரை குடித்துள்ளார். போதையில் தள்ளாடி வடகோவை ரயில் நிலையத்திற்கு வந்தார். 

யாரும் எதிர்பாராத போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அந்தப் பாதையில் சென்றோர் பதறி அடித்து கொண்டு அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மணிகண்டன் அங்கிருந்து எழுந்து வரவில்லை. பொதுமக்கள் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மணிகண்டனை அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை வடகோவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவமானது வடகோவை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பதற்றத்தை உருவாக்கியது.