பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர் கைது செய்யபட்டிருப்பது மேட்ரிட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையத்தில் பெண்களை ஆபாச கோணங்களில் படம் பிடித்த நபர்! கேமராவை எங்கு வைத்திருந்தார் தெரியுமா?

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட். இங்கு கொலம்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். அவர் மேட்ரிட் நகரில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது அங்குள்ள பெண்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 550 பெண்களை அவர் இதுவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். 283 ஆபாச வீடியோக்களை அவர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் பதிவேற்றம் செய்த வீடியோக்களை லட்சக்கணக்கானோர் தினந்தோறும் பார்த்து வருகின்றனர்.
மேட்ரிட் நகரில் ரயில் நிலையங்களிலும், பலசரக்கு அங்காடிகளிலும் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் மீது சந்தேகங்கள் எழுந்ததால் காவல்துறையினர் இவரை மறைந்திருந்து கண்காணித்து வந்தனர். வழக்கம்போல ரயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.
அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது நூற்றுக்கணக்கான வீடியோக்களை கொண்ட மடிக்கணினியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஆபாச புகைப்படம் எடுப்பது ஸ்பெயின் நாட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானதால் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது மாட்ரிட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.