சவுக்கு காடு! நள்ளிரவு! டார்ச் லைட் வெளிச்சத்தில் 25 வயது பேராசிரியைக்கு 23 வயது மாணவன் கொடுத்த அதிர்ச்சி அனுபவம்!

கல்லூரி பேராசிரியையை நிர்வாணப்படுத்தி இளைஞர் வீடியோ எடுத்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக  கொண்டவர் விஷேஷ். விஷேஷின் வயது 23. இவர் சென்னைக்கு இடம்பெயர்ந்து, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே மாமல்லபுரத்திலுள்ள பிரபல தனியார் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து வந்தார்.

பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் பணியாற்றி வந்தார். இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. 6 மாதங்களாக இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

தன்னுடைய படிப்பானது நிறைபெறூவதாக கூறி விஷேஷ் ஆசிரியைக்கு விருந்து கொடுக்க முடிவு செய்தனர். அதேபோன்று ஆசிரியையை விருந்துக்கு அழைத்துள்ளார். தன்னுடைய நண்பர் என்பதால் ஆசிரியை தைரியமாக அவருடன் சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் இருவரும் கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்றிருந்தார். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியின் இருட்டு பகுதியில் வாகனத்தை செலுத்தி எப்போது ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கேட்டதற்கு உள்ளே ஒரு விடுதியில் விருந்தளிப்பதாக விஷேஷ் கூறியுள்ளார்.

சிறிது தூரம் சென்ற பிறகு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டார். சௌக்குமரம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டார். திடீரென்று விஷேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ஆசிரியையை மிரட்டியுள்ளார். ஆசிரியையை நிர்வாணமாக வீடியோ எடுக்க வேண்டும் என்று விஷேஷ் வற்புறுத்தியுள்ளார். எவ்வளவோ முயற்சித்தும் ஆசிரியையினால் தப்பித்து செல்ல இயலவில்லை. தன்னுடைய செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ஆசிரியையை நிர்வாணமாக வீடியோ எடுத்தார்.

இதைப்பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று ஆசிரியையை மிரட்டி வீட்டிற்கு அனுப்பினார். மறுநாள் காலையில் ஆசிரியைக்கு கால் செய்து உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் பயந்துபோன ஆசிரியை செம்மெஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விஷேஷுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் பேச்சு கொடுக்க காவல்துறையினர் ஆசிரியைக்கு அறிவுறுத்தினர். அதன்படி ஆசிரியை அவரை கோயம்பேட்டுக்கு வருமாறு கூறினார். 

கோயம்பேட்டுக்கு வந்த விஷேஷை கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்தனர். அவருடைய மொபைல் போனில் இருந்த வீடியோவை காவல்துறையினர் அழித்தனர். பின்னர் விஷேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்

விசாரணையில், ஆசிரியைக்கு சென்னையில் உறவில்லாததால் அத்து மீறியதாக விஷேஷ் கூறியுள்ளார். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.