தாயின் சடலத்தை குப்பை தொட்டியில் வீசிய கொடூர மகன்!! பணம் இல்லாததால் நேர்ந்த அவலம்!!

பெற்ற தாயின் சடலத்தை குப்பை தொட்டியில் வீசி சென்ற மனிதநேயமற்ற மகன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியில் தன்சிங் நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் முத்துலக்ஷ்மணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். 

திடீரென்று இன்று காலை அப்பகுதியில் இருந்த குப்பை தொட்டியில் முத்துலக்ஷ்மணனின் தாயார் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக முத்துலக்ஷ்மணனிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது தானே தன் தாயாரின் உடலை குப்பை தொட்டியில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டார். தாயாருக்கு இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தினால் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.