என் கண் முன்னாலேயே கள்ளக் காதலியுடன்! கணவனின் செயலால் கதறித் துடிக்கும் மனைவி! மார்த்தாண்டம் பரிதாபம்!

கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவியை கணவர் கொடுமைப்படுத்திய சம்பவமானது மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மார்த்தாண்டத்துக்கு அருகே செங்கொடி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சுபாஷினி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 27. இவருக்கு 2015-ஆம் ஆண்டில் சுவாமி மலையை சேர்ந்த ஜோன்ஸ் ராஜீவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

எங்கள் திருமணத்தின்போது 65 பவுன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களையும் வரதட்சணையாக சுபாஷினி கொடுத்துள்ளார். சுபாஷினியின் பெற்றோர் மிகவும் வசதி படைத்தவர்கள் என்பதால் சுபாஷினியின் பெயரில் நிறைய சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். 

திருமணமான நாளிலிருந்து சொத்துக்களை தன் பெயரில் மாற்றி எழுதி வைக்குமாறு சுபாஷினியின் கணவர் அவரிடம் முறையிட்டு வந்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜோன்ஸ் ராஜீவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்பானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ராஜீவும் அவருடைய கள்ளக்காதலியும், சுபாஷினியை மிரட்டி வந்துள்ளனர். மேலும் சுபாஷினியின் நகையை புகுந்த வீட்டார் விற்று செலவு செய்து விட்டனர். தற்போது சுபாஷினியின் குழந்தையை கொன்று விடுவதாக இருவரும் மிரட்டி வருகின்றனர். 

இதனால் பயந்து சுபாஷினி தன் கணவர் மற்றும் அவருடைய கள்ளக்காதலியின் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இருவருக்கும் பாதுகாப்பளிக்குமாறும், அந்த நகையை மீட்டு தருமாறும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்கள் ஜோன்ஸ் ராஜிவ் மற்றும் அவரது கள்ளக்காதலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது மதுரவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.