பேஸ்புக்கில் செல்போன் நம்பரை வெளியிட்ட இளம் பெண்! செல்போனில் வந்த மர்ம மெசேஜ்! பிறகு நேர்ந்த விபரீதம்!

இளம்பெண்ணிடம் ஆபாச புகைப்படங்கள் இருப்பதாக கூறி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது திருப்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் நல்லூர் எனுமிடம் அமைந்துள்ளது. அங்கு வசித்து வரும் இளம்பெண்ணுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதாவது அந்தப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

குறுஞ்செய்தியை படித்த இளம்பெண் பதறிப்போய் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் நடத்த தொடங்கினார்.

அப்போது இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் நரேஷ் என்ற இளைஞர் என்று காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராவார். 

காவல்த்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, தனக்கு அடுத்த மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு போதிய பணம் இல்லாததால் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை பேஸ்புக்கிலிருந்து எடுத்து மிரட்டியதாக கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இளம்பெண்கள் தங்களைப்பற்றிய செய்திகளை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

இந்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.