துப்பாக்கி காட்டி 2வது மனைவியை மிரட்டிய கணவன் - - போலீஸ் கவனிப்பு சூப்பரப்பு

2-வது மனைவி குடும்பம் நடத்த வராத காரணத்தினால் துப்பாக்கியை காட்டி கணவன் மிரட்டியிருக்கும் சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வாட்ஸ்ஆப் முகவர்களுக்கு சமீபகாலமாக வீடியோயொன்று வெளியாகி வருகிறது. அந்த வீடியோவை ஆண் ஒருவர் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு "நான் பேசமாட்டேன். துப்பாக்கி தான் பேசும். நேர்ல பாத்தா சுட்டு தள்ளிடுவேன். பொம்மை துப்பாக்கினு நினைக்காத" என்று மிரட்டுகிறார். அதன் பிறகு பெண்ணொருவர் பேசுகிறார். அதாவது, "என் பெயர் மலர். நான் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன்.

நான் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர். என் முதல் கணவர் உயிரிழந்துவிட்டார். எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தபோது காட்பாடியை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஊழியரான கபாலீஸ்வரன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னை கொடுமைப்படுத்தியால் நீங்கள் அவரை பிரிந்தோம். ஆனால் எங்களை துரத்தி அவர் மிரட்டி வருகிறார். எங்களை யாராவது காப்பாற்றுங்கள்" என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோவானது வேலூர் மாவட்டத்தில் வைரலாக பரவி வருகிறது. காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கபாலீஸ்வரர் வேலூரிலுள்ள பிஷப் நகரை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தனர். அவரை கைது செய்ய முற்பட்ட போது அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். காவல்துறையினர் அவரை வலைத்து பிடித்துள்ளனர்.

அவரிடம் விசாரித்ததில், கபாலீஸ்வரனின் முதல் மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்னர் இழந்துள்ளார். முகநூல் மூலம் அறிமுகமாகிய மலரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மலர் சிங்கப்பூர் சென்றுவிட்டார். இந்நிலையில் தான் கபாலீஸ்வரர் மலரை விரட்டி வாட்ஸ் அப் வீடியோ அனுப்பியுள்ளார். மேலும் இவர் 6 மாதங்களுக்கு முன்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

கைது செய்தபோது கபாலீஸ்வரரிடம் இருந்த 2 கத்திகள், 6 செல்போன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.