எனக்கு கொரானாவா? மாடியில் இருந்து குதித்த இளைஞன்! அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா வைரஸ் அறிகுறிகள் தன்னிடமிருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியை சேர்ந்த 35 வயது இளைஞர் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே அவர் சில நாட்களுக்கு முன்னர் இந்தியா திரும்பினார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சப்தரஜங் என்ற மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்ய பல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனை முடிந்த பின்னர் முடிவிற்காக மருத்துவர்கள் காத்திருந்தனர். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்றிரவு 7-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.

விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பகத்சிங் என்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 1 வருடமாக அவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்துள்ளார். அந்த இளைஞனும் மருத்துவர்களிடம் மிகுந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று மருத்துவர்கள் கூறினர். 

கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது இல்லையா என்பதை தெரிந்து கொள்ளாமலேயே அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.