கண்ணான கண்ணே பாடி கலங்க வைத்த பார்வையற்ற சிறுவன்! வாய்ப்பு கொடுத்து நெகிழ வைத்த டி இமான்!

கண்தெரியாத சிறுவனுக்கு பாடுவதற்கான வாய்ப்பை இசையமைப்பாளர் இமான் வழங்கப்போவதாக கூறியுள்ளதை மக்கள் வரவேற்கின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நொச்சிக்குப்பம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு திருமூர்த்தி என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்றவர். சமீபத்தில் இவர் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற "கண்ணான கண்ணே" என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப்பாடலின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவை இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடகர் சிட் ஸ்ரீராம் ஆகியோர் பகிர்ந்துள்ளனர். இந்த பாடலானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமூர்த்தியின் செல்போன் எண் கிடைத்தால் பகிருமாறு கேட்டிருந்தார்.

அதற்கேற்றவாறு பலரும் திருமூர்த்தி எண் செல்போன் எண் ணெய் பகிர்ந்து வந்தனர். செல்போன் எண்ணை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி கூறிய இமான், விரைவிலேயே தான் இசையமைக்கப் போகும் படத்தில் திருமூர்த்தி வாய்ப்பு வழங்கப்போவதாக கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் பலரும் இமானின் இந்த அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். மேலும் பல நெட்டிசன்கள் திருமூர்த்தி என் குரல் மிகவும் இனிமையாக உள்ளதாகவும், அவர் பிரம்மாண்டமாக பாடுகிறார் என்றும் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் அனைவரையும் மகிழ வைத்துள்ளது.