கடுமையான வயிற்று வலியால் துடித்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்புச் சத்து மாத்திரைக்கு பதில் இரும்புக் கம்பி! இளைஞரின் வயிற்றை ஸ்கேன் எடுத்து அதிர்ந்து போன டாக்டர்கள்! பதற வைக்கும் காரணம்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் சாம்சன். இவருடைய வயது 19. இவர் சில நாட்களுக்கு முன்னர் உடம்பு சோர்விற்காக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். இவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளதாகவும், சிவப்பு ரத்த அணுக்கள் மிகவும் குறைவாக உள்ளதாக கூறியிருந்தார்.
இதனை சரி செய்வதற்காக மருத்துவர் நிறைய மாத்திரைகளை எழுதி கொடுத்திருந்தார். ஆனால் அவற்றையெல்லாம் சாம்சன் கண்டுகொள்ளவில்லை. நேராக இரும்பு சத்து குறைபாட்டை போக்குவதற்காக இரும்பு கம்பியை விழுங்கியுள்ளார்.
இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் இரும்பு கம்பி இருப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.
இணையதளத்தில் அதிக நாட்டம் கொண்ட சாம்சன், தனக்குத் தேவையான அனைத்தையும் அதன் மூலமாகவே தெரிந்து கொள்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார். அவ்வகையில் அதிகளவில் ஆற்றல் பெற, பேட்டரி மூலம் தன்னுடைய உடலை சார்ஜ் செய்துகொள்வதாக ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.