வருங்கால மனைவிக்கு தாலி கட்டுவதற்கு மாப்பிள்ளை சிரமப்படும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாலி கட்ட தெரியாமல் தடுமாறிய மணமகன்..! மேடையில் மணமகளுக்கு அதிர்ச்சி அனுபவம்! வைரல் வீடியோ!
சமூக வலைத்தளங்களில் நேற்று ஒரு கல்யாண வீடியோவானது வைரலாகி அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது.
கேரளாவை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணவறையில் இருவரும் அமர்ந்திருக்க, மணமகனிடம் தாலி கொடுக்கப்படுகிறது. அந்த தாலியை மணமகன் மணமகளின் கழுத்தில் கட்டுவதற்கு தள்ளாடுகிறார். தாலி எவ்வாறு கட்டுவது என்பது தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அவர் ஒரு வழியாக உறவினர்களின் உதவியுடன் தாலியை கட்டி முடித்தார்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிலர் மாப்பிள்ளை நிச்சயமாக "90-கிட்ஸ்" போன்று அப்பாவியாக உள்ளார் என்றும் கூறியுள்ளனர்.