ஒன் பாத்ரூம் போக முடியாமல் தவிப்பு! இளைஞனின் சிறுநீரகத்தில் இருந்த மர்ம பொருள்! கண்டுபிடித்து அதிர்ந்த டாக்டர்கள்!

சிறுநீர் கழிக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்த நபரின் சிறுநீரகத்தில் துப்பாக்கி குண்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் தவித்து வந்துள்ளார். அவருக்கு சிறுநீர் கழிக்கும் போது எல்லாம் கடுமையான வலியும் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் சிறுநீர் முழுவதுமாக வெளிவராமல் இருந்து அவருக்கு சிரமத்தை அதிகரித்துள்ளது.

உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தவுடன் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய சிறுநீரகப் பையில் துப்பாக்கி குண்டு இருப்பதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர்.

அந்த குண்டை சுற்றி சிறுநீரக கற்கள் வளர்ந்துள்ளன. மேலும் கூர்மையான பரப்பும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர் கடுமையாக பாதிப்படைந்தார். மருத்துவர்கள் சிறுநீரகத்தில் இருந்த குண்டை குழாய் மூலம் வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அது இயலவில்லை. உடனடியாக அடிவயிற்றில் துளைபோட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த குண்டை வெளியே எடுத்தனர்.

பின்னர் அந்த குண்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 1990-ஆம் ஆண்டில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர் குண்டடிபட்டிருந்தார். அப்போது அந்த குண்டு வெளியேற்றுவது அவருடைய உயிருக்கு ஆபத்தாக இருந்தது. அதனால் மருத்துவர்கள் அப்படியே விட்டுவிட்டனர் என்று கூறப்படுகிறது.

தற்போது அவருக்கு சிறுநீர் கழிப்பது எளிதாகி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.