டீசண்டாக உடை அணிந்திருந்த நபர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் திருடியுள்ள சம்பவமானது திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிப்டாப் உடையுடன் சூப்பர் மார்கெட் வந்து பெண்களின் அந்த பொருட்களை திருடிய நபர்..! சிசிடிவி காட்சி வைரல்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மா.பொ.சி சாலை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் புகழ்பெற்ற சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. எந்த சூப்பர் மார்க்கெட்டில் சில நாட்களுக்கு முன்னர் மிகவும் நாகரீகமாக உடையணிந்த நபர் ஒருவர் மளிகை பொருட்களை திருடி தன்னுடைய தன்னுடைய முதுகு பைக்குள் வைத்துக்கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை சிசிடிவி கேமரா பதிவுகளில் கடையின் ஊழியர் பார்த்துள்ளார். உடனடியாக அந்த நம்பரை பிடிக்க முயன்றபோது, அவர் லாவகமாக தப்பிச்சென்றார். இந்த சம்பவம் குறித்து கடை ஊழியர்கள் காவல்நிலையத்திற்கு புகாரளித்தனர். கடந்த 6 மாதங்கள் குறித்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் மேலான பொருட்களை டீசன்டான நபர் மற்றொரு பெண்ணுடன் வந்து திருடி சென்றது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.