பெண்ணின் நெஞ்சுக்குள் 6 அங்குலம் நுழைந்த கத்தி! 30 மணி நேரமாக உள்ளேயே இருந்தது..! ஆனால் உயிர் பிழைத்த அதிசயம்! எப்படி தெரியுமா?

நெஞ்சில் இறங்கிய கத்தியுடன் 30 மணி நேரம் போராடி கொண்டிருந்த பெண் மீட்க்கப்பட்டுள்ள சம்பவமானது கோயம்புத்தூரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மல்லிகா என்ற 40 வயது பெண் வசித்து வந்துள்ளார். சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று மர்ம நபர்கள் இவரின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். கத்தியானது கிட்டத்தட்ட 6 இன்ச் வரை அவருடைய நெஞ்சுக்குள் சென்றது. கைப்பிடியின் சிறிய அளவு மட்டுமே உடலுக்கு வெளியே தெரிந்தது. 26-ஆம் தேதியன்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்றே மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதய சிகிச்சை பிரிவின் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவை சிகிச்சை அவசரமாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர். மேலும் முக்கியமான இடங்களில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதனை மருத்துவர்கள் கண்டறிந்தனர். நுரையீரலில் மட்டும் லேசான பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக பரிசோதனை முடிவில் தெரிந்தது.

இதையடுத்து இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர், உதவி பேராசிரியர்கள் மற்றும் சில செவிலியர்களின் உதவியுடன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 30 மணி நேரம் நெஞ்சிலிருந்த கத்தி மருத்துவர்களால் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. 

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றியானது கோவை அரசு மருத்துவமனைக்கு பெருமை தேடி தரும் அளவிற்கு அமைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகிகள் கருதுகின்றனர்.