கொரோனாவை பரப்புகிறேன்..! ரூபாய் நோட்டில் எச்சில் துப்பு வாயில் தேய்த்து நபர் வெளியிட்ட வீடியோ! பீதி கிளப்பும் சம்பவம்!

கொரோனா வைரஸ் நோயை பரப்பும் வேலையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 11,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 3372 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 267 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 77 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மிகவும் அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 550-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன் கையிலுள்ள ரூபாய் நோட்டில் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை துடைக்கிறார். கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் அவர் அவ்வாறு செய்கிறார். மூக்கில் இருந்து வழியும் சளியை ரூபாய் நோட்டில் தடவுகிறார். இத்தகைய காட்சிகளை கொண்ட ஒரு வீடியோவானது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது‌.

இந்த வீடியோவை பார்த்த மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்வதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  மேலும் சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் அவர் வெளியிட்ட பேட்டியில், "இந்த நோய் தாக்குதலை தயவுசெய்து வகுப்புவாத அரசியலாக மாற்றாதீர்கள். அவ்வாறு மாற்ற முயற்சிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நம் மாநிலத்தில் இந்த வைரஸ் தாக்குதல் குறித்து தவறான வதந்திகள் பரவி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது" என்றும் கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே அவர்களின் ஆணைப்படி, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.