நாடார் ஜாதி பெண்கள் எல்லோரும் அப்படித்தான்..! வீடியோ வெளியிட்டவன் மாவுக்கட்டுடன் சிக்கிய பின்னணி! திருச்செந்தூர் பதற்றம்!

மதுபோதையில் சட்டமன்ற உறுப்பினர் குறித்தும், ஒரு சமுதாயம் மற்றும் பெண்களை குறிக்கும் அவதூறாக பேசிய இளைஞர் 4 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். டிப்ளோமா வர படித்து முடித்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். மதுபோதையில் ஃபேஸ்புக்கில் இவர் பதிவு செய்து வந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

சில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணனை அவதூறாக பேசியிருந்தார். "ஏய் அனிதா ராதாகிருஷ்ணன்!! நீ எம்எல்ஏ வா இருந்த 18 வருஷத்துல நீ செஞ்ச எல்லா அயோக்கியத்தனத்திற்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு" என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மணிகண்டன் "நீ தப்பு பண்ணிட்ட ராதாகிருஷ்ணா. நீ என்னை கூப்பிட்டு தனியாக பேசி இருக்கணும். என்னோட குடும்பத்தை மிரட்டிட்டு போயிருக்க. இப்போ என்ன பண்றேனு பாரு" என்று கூறி மற்றொரு வீடியோவை வெளியிட்டார். ஆத்திரமடைந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த நான்கு மாதங்களாக மணிகண்டன் சப்ளையராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் அந்த சமுதாயத்தை சேர்ந்த பெண்களை பற்றி மணிகண்டன் இழிவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவினால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர் காவல் நிலையத்தில் சென்று மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.

இந்நிலையில் மணிகண்டன் கேரளாவிலிருந்து லாரி ஒன்றில் வருவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. உடனடியாக காவல்துறையினர் சாத்தான்குளம் பைபாஸில் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.