மூடப்பட்ட மதுபானக் கடைகள்..! குடிமகன்களைச் தேடிச் சென்று மதுபானம் இலவசமாக வழங்கிய இளைஞர்கள்..! ஆனால்?

அதிக லைக்குகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவேற்றம் செய்தல் வீடியோவால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,19,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 19,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 9,352 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 980 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 324 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 21 நாட்களாக இந்திய நாடு முழுவதிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலுள்ள மதுக்கடைகளும் மூடப்பட்டன இதனால் மதுப் பிரியர்கள் மதுவின்றி மன அழுத்தத்திற்கு செல்வதாக பல்வேறு செய்திகள் வெளியாகின. சிலர் அது கிடைக்காத விரக்தியில் தற்கொலை கூட செய்துள்ளனர் என்பது வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகருக்கு உட்பட்ட சம்பாபேட் என்ற பகுதியை சேர்ந்த பல குடிமகன்கள் மது பாட்டில்கள் கிடைக்காத விரக்தியில் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த 30 வயது நபர் மதுபாட்டில்களை வாங்கி வழங்கியுள்ளார். 

அவர் மது வழங்கும் போது அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அதிக லைக்குகள் பெறவேண்டும் என்ற தேவையற்ற ஆசையினால் அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ அல்லது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினர் கண்களிலும் சிக்கியது.

உடனடியாக அப்பகுதிக்கு உட்பட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.