கட்டிய கணவனுக்கு கொடூர நோய்! 5 ஆண்டுகள் தான் வாழ்க்கை! மனைவி செய்த மோசமான செயல்!

இறக்கப்போகும் கணவரை மனசாட்சியின்றி பெண்ணொருவர் பிரிந்த சம்பவமானது ஆஸ்திரேலிய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியா நாட்டில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் சிகரெட் பிடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு திடீரென்று கடுமையான இருமல் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அவரை அவருடைய மனைவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டு உள்ளதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார் என்றும் கூறினார்.

இதனால் அவருடைய மனைவி எந்தவித அதிர்ச்சியும் அடையவில்லை. மாறாக அவர் எடுத்த முடிவானது அனைவரையும் அதிர வைத்துள்ளது. தம்பதியினர் மகனின் நலனை கருதியே, ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

ஆனால் இருவரும் பேசிக்கொள்வது இல்லை. மேலும் உடல் ரீதியாக இருவரும் ஈடுபடுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் தனித்தனி அறையில் வசித்து வருகின்றனர். "குடும்பத்தினரின் நலன் கருதாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிகரெட் பிடித்து அந்த நபருக்காக இனி நான் கவலைப்பட போவதில்லை. என்னை சுயநலம் மிக்கவர்கள் என்று அனைவரும் நினைத்தால் அதற்கு நான் கவலைப்பட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது ஆஸ்திரேலிய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.