சாக்கடை கால்வாயில் படுத்து சுகமான தூக்கம் போட்ட இளைஞன்! காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க!

மதுபோதையில் இளைஞர் ஒருவர் சாக்கடையை தூங்கி கொண்டிருந்த சம்பவமானது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து தற்போதைய அரசு ஆட்சியை பிடித்தது. ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. முன்பில்லாத அளவிற்கு மதுபானங்கள் தமிழகத்தில் அதிக அளவில் புழங்க தொடங்கியுள்ளன.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள் என்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூறினார். ஆனால் மதுப்பழக்கத்தால் அவர்கள் அனைவரின் வாழ்வும் சீரழிந்து போகிறது. சின்னஞ்சிறு பிள்ளைகளும் கூட தற்போது மதுவிற்கு அடிமையாகியுள்ளனர்.

மதுரையில் கருப்பாயூரணி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட மதுபானக்கடையில் இளைஞர் ஒருவர் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறும் அளவிற்கு மது அருந்தியுள்ளார். சாலையோரத்தில் இருந்த சாக்கடையில் படுத்து உறங்க தொடங்கியுள்ளார்.

இதனைக் கண்ட அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பெரிதும் அசிங்கப்பட்டனர். தான் சாக்கடையில் படுத்திருக்கிறோம் என்பதுகூட நினைவின்றி நிம்மதியாக அந்த இளைஞர் உறங்கிக் கொண்டிருந்தார். பின்னர் சில இளைஞர்கள் அவர் மீது பரிதாபப்பட்டு தண்ணீர் அடித்து அவரின் போதையை கலைத்தனர். பின்னர் அவர் தள்ளாடியபடி சாக்கடையிலிருந்து எழுந்து சென்றார்.

இளைஞர் உறங்கிக்கொண்டிருந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட அனைவரும் பார்க்க சகிக்காமல் முகம் சுளித்துள்ளனர்