நண்பன் உதவியுடன் காதலியை ரேப் செய்த காதலன்! பிறகு வீட்டோடு மாப்பிள்ளையான பரிதாபம்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

மனைவியுடன் இருந்த அந்தரங்க வீடியோவை நண்பருக்கு அனுப்பிவிட்டு புதுக்கோட்டை இளைஞர் தலைமறைவாகியுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பிறந்த செலின் என்ற இளம்பெண், சென்னை அடையாறில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அருண் என்பவர் வேலை பார்த்து வந்தார். 

இவ்விருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு 2013-ஆம் ஆண்டு முதல் நண்பர்களாக பழகி வந்தனர். இடையில் செயலின் பெங்களூருவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட போது இருவரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். 6 வருடங்கள் கழித்து ஜனவரி மாதமன்று அருண் செலினிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவ்வளவு வருடங்களாக நெருக்கமாக பழகி வந்ததால் செலின் ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று செலினை அருண் பெங்களூருவில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அருணின் நண்பரான மணி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனால் செலின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சில நாட்கள் கழித்து அருண் செலினை சமாதானப்படுத்தினார். திருமண ஏற்பாடுகளை செய்வதாக கூறி பெங்களூருவிலிருந்து அருண் சென்னை திரும்பினார். ஆனால் எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாமல் நாட்களை மட்டுமே அருண் கடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்வதாக செலினிடம் அருண் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செலின் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இருவரையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கைது செய்யப்பட போவதை அறிந்த அருண் செலினை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். 

இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் பெங்களூருக்கு சென்று இருவரும் வாழ்க்கையை தொடர்ந்தனர். எந்த வேலைக்கும் செல்லாமல் அருண் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து வந்தார். செலினிடம் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய மெயில் மூலம் நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இதனை அறிந்த அவர் அருணிடம் கடுமையான சண்டையிட்டார்.

மறுநாள் செலின் வேலைக்கு சென்ற பின்னர் அருண் பெங்களூருவிலிருந்து புதுக்கோட்டைக்கு திரும்பியுள்ளார். தன் கணவனை காணாது அதிர்ச்சியோடு அந்த இளம்பெண் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். இங்கு வந்து தன்னுடைய மாமியார் வீட்டில் விசாரித்தபோது அவர்கள் செலினை மிரட்டியுள்ளனர். 

உடனடியாக அவர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்ததை கூறி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அருண் தற்போது தலைமறைவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.