வீட்டிற்குள் பாதாள அறை! தாயாரின் சடலம்! 2 ஆண்டுகளாக இளைஞர் செய்து வந்த விபரீத செயல்! அதிர வைக்கும் சம்பவம்!

சொந்தத்தாயின் உடலை 2 ஆண்டுகளாக பாதாள அறையில் வைத்து காப்பாற்றி வந்த சம்பவமானது ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் உபே என்ற 57 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாரின் பெயர் மேரி. மேரியின் வயது 85. 2017-ஆம் ஆண்டில் வயது மூப்பின் காரணமாக இறந்து போனார். 

உபேவுக்கு தாயார் இறந்த பின்னர் அதிகமான பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவருடைய தாயாரின் உடலை வீட்டின் பாதாள அறையில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு ரசாயன பொருட்களை பயன்படுத்தியுள்ளார். 

அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து மேரியைப்பற்றி உபேவிடம் கேட்டனர். அப்போதெல்லாம் அவர் தன் தாயார் ஸ்பெயின் நாட்டிலுள்ள முதியோர் இல்லத்தில் தங்கி இருப்பதாக கூறி வந்துள்ளார்.

அவருடைய தாயாருக்கு அரசு முதியோர் உதவித்தொகையாக 1740 யூரோக்கள் வழங்கி வந்துள்ளது. மேலும் உபே வேலைக்கு செல்லாததால் அவருக்கு ஜெர்மனி அரசு மாதந்தோறும் 950 யூரோக்கள் வழங்கி வந்தது. இவ்விரண்டு தொகையையும் மாதந்தோறும் அவர் பெற்று வந்தார்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தினருக்கு உபேவின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேரடியாக அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உபேவிடம் விசாரணையில் ஈடுபட்டனர். கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டதால் உபே தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் ஜெர்மனியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.