6 மாத பயிற்சி! வார விடுமுறை! கார்ப்பரேட் கம்பெனியாக இயங்கிய திருட்டு கும்பல்! 5000 செல்போன்களே அபேஸ் செய்த பகீர் சம்பவம்!

செல்போன்களை திருடுவதற்கு பயிற்சி அளித்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட செல்போன்களை கிரகங்கள் திருடியுள்ளனர் சம்பவமானது அனைவரையும் அதிர வைத்துள்ளது.


கார்ப்பரேட் நிறுவனம் போன்ற இளைஞர்களை பணிக்கு சேர்த்து செல்போன் திருடிய இதற்கு போதுமான பயிற்சியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று அளித்து வந்துள்ளது. இந்த கூட்டத்தின் தலைவன் ரவி என்பவனாவான். ரவியுடன் நானி,ராகுல், ஏசு, துர்கா, சாயி, ஸ்ரீனு, ராகேஷ், ஆலா மகேஷ், பிண்டி வெங்கடேஷ், பிண்டி ராஜூ அது கூட்டாளிகளாக பணியாற்றியுள்ளனர்.

மேற்கூறப்பட்ட அனைவரும் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவை சேர்ந்தவர்கள். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து செல்போன் திருடியதற்காக முழு பயிற்சியையும் ரவி கொடுத்து வந்துள்ளார். அழைத்து வரும் இளைஞர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிப்பார். எந்தெந்த வகையில் நூதனமாக திருடுவது என்பது குறித்து இளைஞர்களுக்கு அழகாக கற்றுத்தருவார். கைக்குட்டை மற்றும் செய்தித்தாள்கள் படிப்பது போன்று நூதனமாக செல்போன் திருடுவதற்கு பயிற்சி அளித்துள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை அவர்களை திருட்டுத் தொழிலுக்கு அனுப்பும் ரவி, வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை அளிப்பார். வாரத்திற்கு எவ்வளவு செல்போன்களை திருடவேண்டும் என்ற டார்கெட் வைத்து அவருடைய பணியாளர்களை வேலை வாங்குவார். டார்கெட்டை தாண்டினால் போனசாக 3 செல்போன்களை வழங்குவார். குறைந்த பட்சம் வாரத்திற்கு 2 செல்போன்கள் என்ற வீதத்தில் இதுவரை 5000 செல்போன்களை திருடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 நாட்களுக்குமுன்னர் பூக்கடையில் சந்தேகிக்கும்படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அவரே சந்தேகித்த காவல்துறையினர் விட்டுப்பிடிக்க எண்ணினர். பின்னர் அந்த நபரை செல்போன் திருடன் என்று காவல்துறையினர் கண்டறிந்தனர். 2 காவலர்கள் அவனை பின் தொடர்ந்து சென்றனர்.

சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டில் தான் திருடிய செல்போன்கள் அனைத்தையும் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். அப்போதுதான் சோழவரம் வீட்டில் இருந்த 10 ஆந்திர மாநிலத்தில் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அப்போதுதான் மேற்கூறப்பட்ட அனைத்து தகவல்களையும் ரவி காவல்துறையினரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பூக்கடையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.