ஏடிஎம் எந்திரத்தில் கத்தை கத்தையாக நீட்டிக் கொண்டிருந்த பணம்! கண்டெடுத்த நபர் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு!

ஏ.டி.எம்-ல் தவறுதலாக வந்த பணத்தை உரிய நபரிடம் குறைத்து எஞ்சினுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.


சென்ற வெள்ளிக்கிழமை அன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் உள்ள ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்காக தேசிய ஊடகவியலாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவரான செந்தில்குமார் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்தபோது பணம் வரவில்லை. இவர் பணம் எடுக்க சென்றபோது அவருடைய பணமும் இவருக்கு கிடைத்துள்ளது.

அதிகமாக பணம் கிடைத்ததை அடைந்த அவர் தனக்கு முன் சென்ற நபரை தேடியுள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக ஏடிஎம் வாட்ச்மேன் மற்றும் அருகிலிருந்த மளிகை கடையில் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

திங்கட்கிழமை அன்று தாமாகவே ஏடிஎம் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு பணத்தை இழந்த நபரின் தொடர்பை வாங்கியுள்ளார். அதன் பின்னர் வங்கிக்கு அழைப்பு விடுத்து பணத்தை இழந்த நபரிடம் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார். பணத்தை இழந்த நபர் எவ்வாறு மீட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தாமாகவே சென்று பணத்தை அளித்த செந்தில்குமாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.