தூங்கி எழுந்தேன்! என் மீது ஆடையில்லாமல் படுத்திருந்தார்! இளைஞர் மீது இளம் பெண் கூறிய பகீர் புகார்!

மது போதையில் பெண்ணொருவரை கற்பழித்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் கென்ட் கவுண்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஷேன் பால்ட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 31. இவர் 2017-ஆம் ஆண்டில் மது விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த பெண் ஒருவரிடம் ஷேன் அன்பாக பேசி நண்பராகி உள்ளார்.  இரவு நேரமானதால் அந்தப்பெண்ணை தன் வீட்டிலேயே தங்கி விடுமாறு ஷேன் கேட்டு கொண்டுள்ளார்.

மறுநாள் காலையில் எழுந்தபோது அந்த பெண் கடுமையாக அதிர்ச்சியடைந்தார். அவர் மீது ஷேன் நிர்வாண நிலையில் படுத்திருந்தார். இதனால் ஷேன் தன்னை கற்பழித்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் ஷேனிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் செய்த குற்றத்தை ஷேன் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்மீது படுத்து மட்டும் கொண்டு இருந்ததாக கூறியுள்ளார். அதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின்  அறிவுறுத்தலின்படி டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனையில் ஷேன் மீது தவறிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

அடுத்த விசாரணையில் ஷேன் அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவு வைத்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அதுவும் பொய் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அப்போது ஷேன் தன்னுடைய காதலிக்கு இந்த தகவல் தெரிந்தால் மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டு விடும் என்பதற்காகவே பொய் சொன்னதாக கூறியுள்ளார். 

இந்த விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்பட வதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.