தனிமையை அனுபவிக்க சென்ற பெண்! காதலனின் நண்பர்களுக்கு விருந்தான விபரீதம்!

நம்பி வந்த காதலியை தன்னுடைய 4 நண்பர்களுடன் சேர்ந்து காதலன் ஒருவன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கண்டமங்கலம் என்னும் பகுதி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரபல கொசுவத்தி நிறுவனமான குட் நைட் சுருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் ஒரு வருட காலமாக இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் இரண்டாம் ஷிப்ட் வேலைக்கு சென்றார். நள்ளிரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை தேடி நிறுவனத்திற்கு சென்றுள்ளனர்.

நிறுவனத்தின் மேலாளர் சம்பந்தப்பட்ட பெண் அந்த கடையில் முன்னர் வேலை பார்த்த அருள்ஜோதி என்பவருடன் சென்று விட்டதாக கூறியுள்ளார். அருள்ஜோதியும் அந்த பெண்ணும் நெருங்கிய நண்பர்களாவர்.

பதறி அடித்துக்கொண்டு உறவினர்கள் இருவரையும் தேடி சென்றனர்.அதிர்ச்சி அளிக்கும் வகையில் விநாயகபுரம் சிண்டிகேட் பகுதியில் உடம்பில் பல்வேறு காயங்களுடன் அருள்ஜோதி தனியாக வந்து கொண்டிருந்தார். பெண்ணின் உறவினர்கள் அவரிடம் விசாரித்ததில், இந்த பகுதியில் வந்து கொண்டிருந்தபோது 4 பேர் தன்னை அடித்துப் போட்டுவிட்டு பெண்ணை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். 

கொலை நடுக்கத்தில் பெண்ணின் உறவினர்கள் அவரைத் தேடி சென்றனர். அப்போது அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் சம்பந்தப்பட்ட பெண் உடல் முழுவதும் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடல்நலம் சற்று தேறியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அருள்ஜோதி தன்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறினார். இருவரும் ஒன்றாக சென்றோம். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது அருள்ஜோதியின் 4 நண்பர்கள் என்னை தாக்கி கடத்தினர்‌.

பின்னர் அருள்ஜோதி இணைந்து என்னை தாக்கினார். அவர்கள் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தப்பிக்க முயன்ற எண்னை தண்டவாளத்தில் அடித்து உதைத்து துன்புறுத்தினர் என்று அழுதபடி காவல்துறையினரிடம் சம்பந்தப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அருள்ஜோதி மற்றும் அவரது நண்பர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.