ஆடைகள் இல்லா ஆண் ஒருவரை நாய் போல் சங்கிலி கட்டி இழுத்துச் சென்ற பெண்...! பரபர சம்பவம்..! அதிர்ச்சி காரணம்!

அரைநிர்வாண கோலத்தில் ஆண் ஒருவரை பெண் தரதரவென இழுத்து சென்ற சம்பவமானது வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள புகைப்படத்திலுள்ள பெண்மணியின் பெயர் அப்சனா ஷெஜுட்டி. இவர் டாக்கா பல்கலைக்கழகத்தின் கலை சார்ந்த துறையில் பணியாற்றி வருகிறார்.

1968-ஆம் ஆண்டில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் பெண்ணியவாதிகள் பல அக்கிரமமான செயல்களில் ஈடுபட்டனர். சில ஆண்களின் கழுத்தில் சங்கிலியில் கட்டி, நாயை எடுத்து செல்வது போன்று அவர்களை இழுத்து சென்றனர். 

இந்த காட்சியை நினைவூட்டும் வகையில் ஷெஜுட்டி, தத்துல் சவுத்ரி என்ற ஆணை அரைநிர்வாண கோலத்தில் கழுத்தில் சங்கிலியை கட்டி டாக்காவின் வீதிகளில் இழுத்து சென்றுள்ளார். 

இந்த காட்சியானது புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதனால் வங்காளதேச நாட்டில் பெரும் பரபரப்பு உருவானது. பரபரப்பைத் தொடர்ந்து அந்நாட்டின் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

புகைப்படத்தில் இடம் பெற்ற இருவரும் தங்களின் நடவடிக்கைகளுக்கு விளக்கம் அளித்ததில் காவல்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையை விடுத்து அவர்களை விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது வங்காளதேச நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.