சோமேட்டோவில் ஆர்டர் செய்த தன்னுடைய முழு பணத்தையும் ஒருவர் இழந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமேட்டோவில் ரூ.100க்கு ஆசை! கஸ்டமர் கேர்க்கு கால் செய்தவரின் ரூ.77 ஆயிரம் அம்போ! அதிர வைத்த மோசடி!
பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் பொறியாளராக விஷ்ணு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சொமேட்டோ-ஆப்பில் உணவு ஆர்டர் செய்தார். டெலிவரி பையன் வீட்டிற்கு வந்து உணவை அளித்தார். அதில் திருப்தியடையாத விஷ்ணு திருப்பி எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
உடனடியாக டெலிவரி பையன் சேவை மையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். சிரமப்பட்டு தேடி சொமேட்டோவின் சேவை மைய எண்னை கண்டுபிடித்தார். நிறைய முறை கால் செய்து பார்த்தும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. சிறிது நேரம் பிறகு வேறு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அப்போது 100 ரூபாயை திருப்பி தருகிறோம், அதற்கு நீங்கள் 10 ரூபாயை தாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி விஷ்ணு அனுப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவருடைய வங்கி கணக்கிலிருந்து 77,000 ரூபாய் காலியாகிவிட்டது.
இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பே-டிஎம் செயலின் மூலம் பல பரிவர்த்தனைகளில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. 10-ஆம் தேதியன்று நடந்த இந்த நிகழ்வில் இதுவரை குற்றவாளியை கைது செய்ய இயலாமல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.