கேரள லாட்ஜில் கணவன், மாமியாருடன் சடலமாக கிடந்த தமிழ் பெண்! பதற வைக்கும் சம்பவம்!

கேரள மாநிலத்தின் விடுதி ஒன்றில் 2 தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம். இந்த நகரத்தில் பிரகாஷ் பிரமோத் என்பவர் வசித்து வந்தார். இவருடைய தாயாரின் பெயர் ஷோபனா. இவருக்கு ஜீவா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இருவருக்குமே இந்த திருமணமானது 2-வது திருமணமாகும்.

தேக்கடியில் உள்ள ஒரு லாட்ஜில் 3 பேரும் 2 அறை எடுத்து தங்கியுள்ளனர். கடந்த 3 மாதங்களாகவே மூன்று பேரும் ஒன்றாக தங்கி வந்தனர். இப்பகுதியில் சொத்துக்களை வாங்குவதற்காக அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். சொத்துக்கள் வாங்குவதில் பிரகாஷுக்கும், ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார பிரச்சனைகளை எடுத்துரைக்கும் போது இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூவரும் அறையிலிருந்து வெளிவரவில்லை. இதனை சந்தேகித்த விடுதி மேலாளர்கள் தங்களிடம் இருந்த சாவியை உபயோகித்து அறையை திறந்தனர். அப்போது ஜீவா சடலமாக படுக்கையில் கிடந்துள்ளார். மேலும் பிரகாஷ் மற்றும் அவரது தாயாரான சோபனா தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளனர். 

உடனடியாக விடுதி மேலாளர்கள் அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மனைவியை கொலை செய்த பின்னர் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்று பிரமோத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் "தான் பெண்களை ஏமாற்றுபவன்" என்று பதிவு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவமானது தேக்கடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.