கீழ் ஜாதி பெண்ணையா கல்யாணம் பண்ற? தம்பிக்கு அண்ணால் நேர்ந்த கொடூரம்!

இருவேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவமானது கோயம்பத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் என்னும் பகுதி உள்ளது. இதனருகே ஸ்ரீரங்கராயன்ஓடை என்னும் இடம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணிற்கு 17 வயதே நிரம்பியுள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும், உறவினர்கள் காதலை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இருவரது பெற்றோரும் இவர்களை தேடி கண்டுபிடித்தனர். பின்னர் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கவும் முடிவு செய்தனர்.

இதற்கிடையே கனகராஜின்  அண்ணனான வினோத் சாதி வெறி பிடித்தவர். இவர் இந்த திருமணத்தை ஒப்புக் கொள்ளாததால் இரு வீட்டாரும் திருமண பேச்சை நிறுத்தி வைத்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு விரக்தி அடைந்த கனகராஜும்,வர்ஷினி பிரியாவும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினர். சம்பவம் அறிந்த கனகராஜின் தந்தை இருவரையும் யாருக்கும் தெரியாமல் குடிசை ஒன்றில் தங்க வைத்தார்.

கனகராஜன் அண்ணனான வினோத் இருவரையும் தேடி வந்த நிலையில் கண்டுபிடித்தார். அந்த இடத்திலேயே கனகராஜை அவர் அரிவாளால் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். வினோத்தை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவையும் கனகராஜ் அரிவாளால் வெட்டினார்.

இதனை பார்த்த பொதுமக்கள் வினோத்தை தடுத்து நிறுத்தி வர்ஷினி ப்ரியாவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.