11 பெண்கள்..! உடல் ருசி மட்டும் அல்ல..! கட்டு கட்டாக பணமும்..! அதிர வைத்த இன்ஸ்டா என்ஜினியர்!

இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றுக்கொண்டு இளைஞர் ஒருவர் அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடைய தாயின் செல்போனிலிருந்து இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இவருடைய புகைப்படங்களுக்கு ராஜா என்ற நபர் லைக்குகளை அள்ளி வீசியுள்ளார். மேலும் அந்த மாணவியை புகழ்ந்தும் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ராஜா கூறியவாறெல்லாம் அந்த மாணவி புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார்.

புகைப்படங்களை சேகரித்து கொண்ட ராஜா, அந்த மாணவியை தன்னுடன் படுக்கைக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ந்து போன மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டார். இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று ராஜா சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரை மிரட்டியுள்ளார். 

தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தாயும் மகளும் முடிவெடுத்திருந்த நிலையில், உறவினர் ஒருவரின் அறிவுரைப்படி வண்ணாரப்பேட்டை காவல்துறை அதிகாரியான ஜூலியஸ் சீசர் என்பவரிடம் நிகழ்ந்ததை எடுத்து கூறியுள்ளனர். அவருடைய ஆலோசனைப்படி 2 லட்சம் ரூபாயை தருவதாக ராஜாவை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அழைத்துள்ளார். அப்போது காவல்துறையினர் ராஜாவை கையும் களவுமாக பிடித்தனர். 

ராஜாவிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது இவர் மென்பொறியாளர் பணிசெய்து வந்ததும், வீட்டிலிருந்தே ப்ராஜெக்ட் செய்வதாக கூறி மனைவியை ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் தன்னுடைய வலைகளில் விழுந்த பெண்களிடம் பணத்தை கேட்டு மிரட்டுவதும், வசதி படைத்த பெண்கள் படுக்கைக்கு அழைத்து சுகம் அனுபவிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. 

ராஜா பயன்படுத்தி வந்த செல்போன், ஆபாச படங்கள் நிறைந்த மெமரி கார்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.