ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞன்! இந்தோனேஷியா ருசிகரம்!

இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தோனேசியா நாட்டில் களிமண்தான் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு 17-ஆம் தேதியன்று இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் 2 பெண்களை  திருமணம் செய்து கொண்டார்.

அந்த இளைஞரை 2 பெண்களும் காதலித்து வந்துள்ளனர். அவர்களுக்குள் சண்டை ஏற்படாமல் இருப்பதற்காகவும், இருவரையும் நோகடிக்காமல் இருப்பதற்காகவும் அந்த இளைஞர் 2 பேரையும் திருமணம் செய்துள்ளார்.

இந்தோனேஷியாவில் ஒருவர் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள இயலும் என்ற விதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் 2 பெண் வீட்டாரிடமும் வரதட்சனையை அளித்துள்ளார். மிகவும் முக்கியமாக இரு பெண்களின் அனுமதியை பெற்ற பின்னரே அவர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

திருமணத்தின் வீடியோவை நண்பர்கள் எடுத்துள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல் முறையில் மந்திரங்களை சரியாக சொல்ல இயலாமல் தடுமாறினார். ஆனால் 2-வது முறை தெளிவாக உச்சரித்தார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.