சாலையில் கிடந்த 6 சவரன் நகை! வாட்ச்! கண்டெடுத்த போலீஸ்காரர் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு! ஏன் தெரியுமா?

கீழே கிடந்த நகைகளை பத்திரமாக ஒப்படைத்தார் காவல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


சென்னை தண்டையார்பேட்டையில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஓட்டுநராக கார்த்திகை செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பு வழியாக நடந்து சென்றுள்ளார். 

அப்போது அங்கு இருந்த குப்பை தொட்டிக்கு அருகே மர்மமான முறையில் ஒரு பாலித்தீன் பை கிடந்துள்ளது. அந்த பையை பரிசோதித்த கார்த்திகை செல்வன், அதனுள் விலை மதிப்புமிக்க தங்க நகைகள், வாட்ச் முதலியவற்றை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் அந்த பணப்பையை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சிறிது நேரத்திலேயே பட்டாளத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பாலித்தீன் பையை தவற விட்டதாக அந்த காவல் நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்துள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் கார்த்திகேயன் மீட்டெடுத்து வந்த பாலித்தீன் பையை அவரிடம் கொடுத்தனர். கார்த்திகை செல்வனின் நேர்மையை பாராட்டி விக்னேஷ் மற்றும் தண்டையார்பேட்டை காவல்துறையினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.