நான் குடித்துவிட்டு வந்து செய்த அந்த செயல் என் மனைவி உயிரை குடித்துவிட்டது..! கணவன் வெளியிட்ட பகீர் தகவல்!

தான் செய்த தவறினால் தன்னுடைய மனைவி தற்கொலை செய்து கொண்டதாக முகநூலில் வெளியிட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சென்ற மாதம் 25-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், தம்பதியினருக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கணவர் செய்த தவறினால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கணவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதாவது, " 25.4.2020 என் வாழ்க்கையை மாற்றிய நாள். சந்தோஷம் மட்டுமே சுவாசிக்க என்னை முதன்முதலில் ஆனந்த துன்பத்தில் ஆழ்த்திய நாள். உன் தந்தை இறந்த பிறகு நான் கதறி அழுத மற்றொருநாள். அன்று ஒரு நாள் மது அருந்திவிட்டு செய்த செயலால் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கனவில் கூட இவ்வளவு பெரிய சறுக்கல் வரும் என்று நினைத்து பார்ப்பதில்லை.  திருமணமான பிறகு மிகவும் சந்தோஷமாக இருந்தேன். தற்போது அவளில்லாமல் என்னுடைய வாழ்க்கை எதிர் திசையில் பயணித்து வருகிறது.

அவருடைய இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள இயலாத பாவி ஆனேன். இதுபோன்ற நிலைமை என்னுடைய எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் கூட வரக்கூடாது. நான் யோசிக்காமல் செய்த தவறினால் அன்று என்னுடைய மனைவியை இழந்து ஆயுள் முழுவதும் அவருடைய நினைவலைகளோடு, வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். நான்தான் தவறு செய்தேன். ஆனால் என் 6 வயது குழந்தை, என்ன செய்தது. கடவுள் கொடுத்த வரத்தை இழந்து தவித்து வருகிறேன்.

என் மனைவி ஒரு போதும் என்னை குடிக்க வேண்டாம் என்று கூறியதில்லை. அளவாக குடிக்குமாறு கூறுவாள். அன்று அவளுடைய பேச்சை கேட்காததால் என்னுடைய வாழ்க்கையின் சுகங்கள் அனைத்தையும் இழந்து தவித்து வருகிறேன். என்னைப் பற்றி அறியாதோர் இடமிருந்து பழிச் சொற்களை கேட்டு வருகிறேன். தவறு செய்தவன் நான் ஆகையால் தண்டனையை மனமார ஏற்றுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.