7000கிமீ! தஞ்சை To டென்மார்க்! தாயை தேடும் 39 வருட போராட்டம்! நெகிழ்ச்சியுடன் தவிக்கும் மகன்!

39 வருடங்களுக்கு பிறகு தான் பெற்ற தாயை பெண்ணொருவர் கண்டுபிடித்த சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவியின் பெயர் தனலட்சுமி. இருவரும் 1979-ஆம் ஆண்டில் சென்னைக்கு இடம்பெயர்ந்தனர். இத்தம்பதியினருக்கு சாந்தகுமார் என்ற மகன் பிறந்தார்.

குடும்பத்தின் வறுமையினால் பல்லாவரத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் சாந்தகுமாரை தம்பதியினர் டென்மார்க் நாட்டை சேர்ந்த தம்பதியிடம் தத்து கொடுத்தனர். இவர் டேவிட் க்ளெண்டல் நெல்சன் என்று டென்மார்க் தம்பதியினரால் அழைக்கப்பட்டு வந்தார். 

இந்நிலையில் டென்மார்க் தம்பதியினர் சாந்தகுமார் இடம் தத்தெடுத்த உண்மையை கூறினேன் வளர்த்து வந்துள்ளனர். நல்ல முறையில் சாந்தகுமாரி வளர்த்து பெரிய ஆளாகியுள்ளனர். 41 வயது நிரம்பியுள்ள சாந்தகுமார் திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தையாக வாழ்ந்து வருகிறார். 

2013-ஆம் ஆண்டில் தன்னுடைய வளர்ப்பு பெற்றோரிடம் உண்மையான பெற்றோரை தேடுவதற்காக அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்துள்ளார். ஒரு வார காலம் தேடி அலைந்த பின்னர் அவர் கிடைக்காத விரக்தியில் மீண்டும் டென்மார்க் திரும்பியுள்ளார்.

2017-ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் சார்பில் இந்தியாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை நடத்திய அருண் மற்றும் அவரது வழக்கறிஞரான அஞ்சலி ஆகியோரின் உதவியுடன் தன்னுடைய பெற்றோரை சாந்தகுமார் தேடியுள்ளார்.

அவர்களின் பேருதவியால் சாந்தகுமார் கத்துக்கொடுத்த பாதிரியாரின் உறவினர்களின் தொடர்பு கிடைத்தது. அவரின் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படமும், பிறப்பு சான்றிதழும் சாந்தகுமாருக்கு கிடைத்தது. அப்போதுதான் அவருக்கு மார்ட்டின் என்ற அண்ணன் இருந்ததும் அவரும் தத்து கொடுக்கப்பட்டதும் சாந்தகுமாருக்கு தெரியவந்துள்ளது. அவரும் டென்மார்க் நாட்டிலேயே வசித்து வருகிறார் என்ற செய்தி கிடைத்துள்ளது. 

பிறப்பு சான்றிதழை வைத்துக்கொண்டு அடுத்த அடுத்த முறை இந்தியாவிற்கு வந்தபோது வடசென்னையில் தன்னுடைய பெற்றோர் குடியிருந்த இடங்களில் தேடி அடைந்துள்ளார். ஆனால் அவருடைய பெற்றோர் அங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பெற்றோரின் பூர்வீகமான தஞ்சாவூரில் தேட போவதாகவும், தன்னிடமுள்ள புகைப்பட ஆதாரங்களின் மூலம் மிகவும் எளிதாக தன் பெற்றோரை கண்டுபிடித்துவிட முடியும் என்றும் சாந்தகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாந்தகுமாரின் தேடலுக்கு நிச்சயம் வெற்றி கிட்ட வேண்டுமென்று அவருக்கு நெருக்கமான இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.