இரண்டு கைகளும் கிடையாது..! ஆனால் விழாக்களில் புகைப்படம் எடுத்து அசத்தும் கலைஞன்! காண்போரை கலங்கச் செய்யும் வீடியோ உள்ளே!

2 கைகளை இழந்தும் இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுக்கும் வீடியோவானது அனைவரையும் உருக செய்துள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கு முன்னுதாரணமாக மற்றொரு மாற்றுத்திறனாளியின் வீடியோ வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். 2 கைகளை இழந்திருப்பினும் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். தன்னுடைய பேண்ட்டில் வைத்திருந்த மொபைல் போனில் எளிதாக எடுத்து பேசுகிறார். பேசி முடித்த பின்னர் எவ்வித சிரமமுமின்றி செல்போனை பாக்கெட்டிற்குள் வைக்கிறார். கைகளை இழந்தாலும், அவர் மொபைல் போனை மிகவும் எளிதாக பயன்படுத்துவது நிகழ்ச்சியில் இருந்தோரை கண் கலங்க வைத்துள்ளது. 

பாதிக்கப்பட்ட இளைஞரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் பாராட்டும் வகையில் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.