ராங் நம்பர் காதலியுடன் கணவன் உல்லாசம்! அதிரடியாக அறைக்குள் நுழைந்த மனைவி! பிறகு என்ன நடந்தது தெரியுமா?

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசம் கொண்டிருந்த கணவனை கையும் களவுமாக பிடித்து மனைவி தாக்கிய சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


நாகர்கோவில்  மணவாளக்குறிச்சி என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் வாலிபர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு செல்போனில் மிஸ்டுகால் ஒன்று வந்தது. அந்த எண்ணிற்கு மீண்டும் முயன்ற போது ராங் நம்பர் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

மறுமுனையில் இருந்து ஒரு பெண் பேசியதாக தெரிந்துள்ளது. சில தினங்கள் கழித்து இவர் மீண்டும் அதே நம்பருக்கு கால் செய்து பேசியுள்ளார். அந்த பெண்ணிடம் நட்பு பாராட்டி மெதுவாக நண்பராகியுள்ளார்‌. அந்த பெண் இவரை நம்பத் தொடங்கியவுடன், தன் அந்தரங்கங்களை இவரிடம் வெளியிட்டுள்ளார். மேலும் தான் பணகுடி கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் சில நாட்களிலேயே கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் வாலிபர் அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். காவல்கிணறு பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார். தான் திருமணமானதை மறைத்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதற்கிடையே கணவனை நடத்தை மீது மனைவிக்கு சந்தேகம் எழ தொடங்கியது. அடிக்கடி வெளியூர் செல்வதாக கூறி எங்கே செல்கிறார் என்பதை கண்டுபிடிக்க தன் உறவினர் ஒருவரை வேவு பார்க்க கூறியுள்ளார். அவரும் இளைஞரை பின்தொடர்ந்து சென்ற போது லாட்ஜுக்கு செல்வதை கண்டுள்ளார். மேலும் ஒரு பெண் பின்தொடர்ந்து செல்வதையும் கண்டுள்ளார். 

இதனை அந்த பெண்ணிடம் அவருடைய உறவினர் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணும் அவருடைய உறவினர்களும் சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்றனர். தன் கணவன் தங்கியிருந்த அறையை திறந்த போது அவர் உல்லாசத்தில் ஈடுபட்டு இருந்தார். இதனை கண்ட மனைவி தன் கணவனையும் அந்தக் கள்ளக் காதலியையும் அடித்து விளாசியுள்ளார். 

இந்நிலையில் பணகுடி காவல்துறையினர் சம்பவமறிந்து அந்த லாட்ஜுக்கு விரைந்தனர். கள்ளக்காதலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.