கடை வாசலில் சாவியுடன் வண்டியை நிறுத்திய உரிமையாளர்..! அசால்ட்டாக லவட்டிச்சென்ற இளைஞன்! சிசிடிவி தேடுதல் வேட்டை!

சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இளைஞர் திருட முயன்ற சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் குமரன் சாலை அமைத்துள்ளது. இங்கு மணிமாறன் என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். மணிமாறன் காலையில் வழக்கம் போல கடைக்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

சற்று கவனக்குறைவாக இருந்த மணிமாரன் இருசக்கர வாகனத்திலேயே சாவியை வைத்துவிட்டுச்சென்றுள்ளார். செல்போன் பேசிக்கொண்டே வந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாவியிருப்பதை கண்டுள்ளார். யாரும் பார்க்காத சமயத்தில் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து கடை வாசலில் தன்னுடைய இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு மணிமாறன் அதிர்ந்துள்ளார். உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகாரளித்துள்ளார்.

மணிமாறனின் கடைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துச்செல்லும் வீடியோ பதிவாகியுள்ளது. கேமரா பதிவுகளை உபயோகித்து இளைஞரை கண்டு பிடிக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.