போலீஸ் மாமா, எங்க அம்மாவின் நெஞ்சில் எங்கள் அப்பா அடித்துக் கொண்டிருந்தார்..! தாயின் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்த குழந்தைகளின் பகீர் வாக்குமூலம்!

மத்திய பிரதேசத்தில், கணவர் ஒருவர் தன்னுடைய குழந்தைகள் கண்முன்னே மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் செஹோர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வருபவர் ராஜ்மல் ரத்தோர். இவர் சுமன் (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் சுமனின் தாயார் லீலா பாய் (வயது 46) இவர்களுடன் ஒரே வீட்டில் இருந்து வந்திருக்கிறார். சம்பவ தினத்தன்று சுமன், அவரது தாயார் லீலாபாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு நேரத்தில் வீட்டிலிருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த சுமனின் கணவர் ராஜ்மல் ரத்தோர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை வைத்து உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கிறான். அவனது குழந்தைகள் செய்வதறியாது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்து உள்ளனர். பின்னர் அந்த இடத்தை விட்டு அவன் தப்பித்து ஓடி இருக்கிறான். 

இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சுமன் மற்றும் அவரது தாயாரின் உடலை பார்த்துள்ளனர். அப்பொழுது அவர்களது உடலில் கோடாரியை கொண்டு தாக்கிய அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் சுமனின் குழந்தைகளிடம் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. போலீசார் கேட்ட கேள்விக்கு பதிலளித்த குழந்தைகள், "போலீஸ் மாமா, எங்க அம்மாவின் நெஞ்சில் எங்கள் அப்பா அடித்துக் கொண்டிருந்தார்.." குழந்தைகள் கூறிய இந்த வாக்குமூலத்தை வைத்து போலீசார் சுமனின் கணவர் ராஜ்மல் ரத்தோர் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டுமென்று முடிவுக்கு வந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்க கூடும் என கூறியிருக்கின்றனர்.

போலீசார் இதன் அடிப்படையிலும் தங்களுடைய விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் போலீசார் கொலை செய்யப்பட்ட சுமனின் கணவர் ராஜ்மல் ரத்தோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் பொழுது குற்றவாளி என கருதப்படும் ராஜ்மல் சம்பவ தினத்தன்று தான் ஊரிலேயே இல்லை என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.