மனைவியின் கள்ளக்காதலனை மது அருந்தலாம், அசைவ உணவு உண்ணலாம் என்று ஏமாற்றி வரவழைத்து, அவனை கொடூரமான முறையில் கணவன் கொன்றுள்ளான்.
கணவனின் நண்பனை ஆசை நாயகனாக்கிய மனைவி! கறிச்சோறு போட்டு சம்பவம் செய்த இளைஞன்! அதிர்ச்சி சம்பவம்!
காரியாபட்டி என்னும் கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதனருகே கல்லுப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் என்பவர். இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் அருகில் உள்ள கட்டிட தொழில் நடக்கும் இடங்களில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்களை போன்றே அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து கட்டிட தொழில் புரிந்து வந்தார். ஒரே தொழில் என்பதால் காளிமுத்துவும் கருபண்ணனும் நண்பர்களாயினர். இதனை காளிமுத்து தவறாக பயன்படுத்தியுள்ளார். முத்துலட்சுமிக்கு ஆசையை காட்டி அவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
ஒரு இடத்தில் பணிபுரிவதால் கருப்பண்ணன் இருவரையும் சந்தேகிக்கவில்லை. இதனை இவர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு கருப்பண்ணனுக்கு சந்தேகம் வந்துள்ளது. தன் மனைவி வேறு பாதையில் செல்வதை கருப்பண்ணன் கண்டுபிடித்தார்.
பின்னர் காளிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டு வந்தார். அதன்படி ஒருநாள் வீட்டில் அசைவ உணவு செய்துள்ளோம், வந்து உணவருந்து என்று காளிமுத்துவை அழைத்துள்ளார். காளிமுத்துவும் நம்பி சென்றுள்ளார். உண்ட பின் இருவரும் மது அருந்த தொடங்கினர். மது போதை அதிகமான போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அருகிலிருந்த மண்வெட்டியை கொண்டு காளிமுத்துவை கருப்பண்ணன் தாக்கியுள்ளார். தடுக்க சென்ற முத்துலட்சுமியை காளிமுத்து துரத்தினார். ஆனால் முத்துலட்சுமி பதுங்கி கொண்டார். காளிமுத்து அதிகமாக மது அருந்தியதால் அவரால் தப்பி செல்ல இயலவில்லை.
இந்நிலையில் அருகே இருந்த மாவாட்டும் அம்மியை எடுத்து காளிமுத்து மீது போட்டு அவரை கொலை செய்ய கருப்பண்ணன் முயற்சித்தார். படுகாயமடைந்த காளிமுத்துவை அருகிலிருந்தோர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி இன்று காளிமுத்து இறந்து போனார். இந்த கொடூர செயலுக்கு காரணமான கருப்பண்ணனை விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் வலைவீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.