30 வயது மருமகளுடன் 60 வயது மாமியாருக்கு தகாத உறவு! கண்டுபிடித்த மாமனார்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

முதியவர் ஒருவர் தன்னுடைய மனைவியையும் மருமகளையும் கொலை செய்திருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சதீஷ் சவுத்ரி என்ற 62 வயது முதியவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சினேகலதா. இவர் டெல்லி போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவராவார். இத்தம்பதியினருக்கு கௌரவ் சவுத்ரி என்ற இளைய மகன் உள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிரக்யா சவுத்ரி வயது 30.  

கடந்த சில மாதங்களாகவே சத்தீஷ் சவுத்ரி தன்னுடைய மனைவி மற்றும் மருமகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காலையில் சதீஷ் தன்னுடைய மனைவி மற்றும் மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அவர்களை தந்தையிடமிருந்து காப்பாற்ற முயன்ற கௌரவ் சவுத்ரிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

இதுகுறித்து கௌரவ சவுத்ரி, விஜய் விஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது 2 பெண்களும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். 

உடனடியாக காவல்துறையினர் கொலை செய்த சதீஷ் சவுத்ரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.