தூக்கத்தில் நடக்கும் வியாதியால் மருமகன் கழுத்தை அறுத்த மாமனார்! பிலிப்பைன்ஸ் அதிர்ச்சி!

கனவில் தேங்காய் இருப்பதாக எண்ணிய மாமனார், மருமகனை கொலை செய்த சம்பவமானது பிலிப்பைன்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோஜர் பஜே என்பவர் செயின் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 48. பிலிப்பைன்ஸ் நாட்டில் பொப்லாஷியர்ஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு எட்வார்டோ என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய நண்பனின் பெயர் எட்கார்டோ.

3 பேரும் நேற்று காலை மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் உறங்கி கொண்டிருந்தபோது திடீரென்று மதியம் 1 மணிக்கு அலறல் சத்தம் கேட்டுள்ளது. எழுந்து ஓடிச்சென்று எட்கார்டோ பார்த்தபோது ரோஜர் எட்வார்டோவை கண்ணை மூடியபடியே மரத்தை அறுப்பது போன்று அறுத்து கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த எட்கார்டோ அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரோஜரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரோஜர் தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாகவும், தேங்காய் உறிப்பதாக எண்ணி மருமகனை கொலை செய்து விட்டதாகவும் கூறினார்.

இந்த சம்பவமானது பிலிப்பைன்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.