விபச்சார அழகியிடம் வாடிக்கையாளராக சென்ற இளைஞன்! பிறகு மனைவியாக்க செய்த விபரீதம்!

பாலியல் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ளாத விரக்தியில் இளைஞரொருவர் அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் 32 வயதான நபர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3  குழந்தைகள் உள்ளனர். டெல்லியில் சிவப்பு விளக்கு ஏரியாவில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் அழகில் மயங்கிய இவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அவரிடம் சென்று, "பாலியல் தொழிலை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்துகொள்" என்று கூறியுள்ளார். 

ஆனால் அதற்கு அந்த  பெண் தனக்கு பாலியல் தொழிலிலிருந்து வெளிவர ஈடுபாடில்லை என்று கூறியுள்ளார். மேலும் இவரைத் திருமணம் செய்து கொள்ளவும் அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்தப்பெண்ணை கொலை செய்துள்ளார். சம்பவமறிந்த காவல்துறையினர் கொலை செய்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.